திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (10:20 IST)

பாஜகவிற்கு அடிபணிந்தாரா தினகரன்? தினகரன் பதில்

அமமுக கட்சியின் தலைவர் தினகரன், பாஜகவிற்கு அடிபணிந்துவிட்டார் என்று வெளியான செய்திக்கு, தினகரன் பதில் அளித்துள்ளார்.
கடந்த 12 ந் தேதி தமிழக வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தினர்.
 
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், என்னதான் இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர் என்றும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால்ன் பாஜக எதிர்ப்பிலிருந்து தினகரன் பின்வாங்குகிறார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், தற்பொழுது அவர் இதற்கு பதிலளித்துள்ளார்.
தமிழகம் வந்த மோடி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து  பேசாமல் சென்றிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். பாஜகவிற்கு அடிபணிந்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன் மதவாத சக்திகளுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.