திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:58 IST)

கொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி என பாரதிராஜா பெயர் வைத்திருக்கலாமே? ஆனந்த்ராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கடந்த சில நாட்களாக இயக்குனர் பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்த் கர்நாடக காவியின் தூதன் என்று விமர்சனம் செய்தார். பாரதிராஜாவின் இந்த விமர்சனத்திற்கு ரஜினி இதுவரை பதில் கூறவில்லை

 
இந்த நிலையில் இன்று காலை ரஜினியை அவரது இல்லத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த்ராஜ், 'தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது என்றும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார் என்றும் கூறினார்.
 
மேலும் ரஜினியை பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆனந்த்ராஜ், 'கர்நாடக தூதுவன் என்று கூறும் பாரதிராஜா, ரஜினியை வைத்து ஏன் 'கொடி பறக்குது' என்ற படத்தை இயக்கினார். அப்படியே இயக்கியிருந்தாலும் அவர் அந்த படத்திற்கு 'பரதேசி' என்ற டைட்டிலை வைத்திருக்கலாம். அவர் ஏன் கொடி பறக்குது' என்ற டைட்டிலை வைத்தார் என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும் கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல் சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது என கருதுகிறேன் என்றும் ஆனந்த்ராஜ் கூறினார்.