புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:03 IST)

ரியானா, கிரேட்டா ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்னை?`: ராகேஷ் திகைத் கேள்வி

எங்களுக்கு ரியானாவையும் தெரியாது, கிரேட்டா டூன்பெர்கையும் தெரியாது. வெளிநாட்டினர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தால் என்ன பிரச்னை? என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கேள்வி. 
 
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்குப்பின் விவசாயிகள் போராட்டம் ஒரு மாதிரியாக திசைமாறத் தொடங்கியது.
 
ஆனால், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கண்ணீருடன் மக்களிடம் பேசி, விடுத்த வேண்டுகோளுக்குப் பின், விவசாயிகள் போராட்டத்தில் முன்பு இருந்ததைவிட கூடுதலாக மக்கள் ஆதரவு பெருகியுள்ளது, வேகமெடுத்துள்ளது.
 
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா டூன்பெர்க் ஆகியோர் ஆதரவு தெரிவித்து, கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கருத்துக்கு மத்திய அரசும், பாஜகவும், இந்திய பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், டெல்லி - உபி எல்லையான காசிபூரில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ராகேஷிடம், போராட்டத்திற்கு வெளிநாட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
 
அதற்கு ராகேஷ் பதில் அளி்க்கையில் "எங்கள் போராட்டத்துக்கு எந்த வெளிநாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு எதையும் வாரிக் கொடுக்கவில்லை, எங்களிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை" எனத் தெரிவித்தார்
 
அமெரிக்க பாடகி ரியானா, நடிகை கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா டூன்பெர்க் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராகேஷ் திகைத், " நீங்கள் குறிப்பிடும் இவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆதரவு அளித்தால் நல்லது தான்" எனக் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.