வலுக்கும் விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி அரசு அதிரடி!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (11:57 IST)
போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில் டெல்லி ஆம் ஆத்மி அரசு, பேருந்துகளை திரும்பப் பெற முடிவு. 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை மேலும் வலிமையாக்க வரும் 6 ஆம் தேதி நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளனர். 
 
சக்கா ஜாம் போராட்டம் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளதால் டெல்லியின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை 3 மடங்காக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது டெல்லி காவல்துறை. 
 
ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டெல்லி போலீஸார், துணை ராணுவப்படையினர் பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த 350 அரசுப் பேருந்துகளை திரும்பப் பெறுமாறு டெல்லி போக்குவரத்துக்கழகத்துக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில் டெல்லி ஆம் ஆத்மி அரசு, பேருந்துகளை திரும்பப் பெற்ற முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :