1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:38 IST)

விவசாயிகளுக்கு ஆதரவாக டுவீட்..கிரேட்டா தன்பெர்க் மீது வழக்கு பதிவு !

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு க்ரேட்டா தன்பெர்க் ஆதரவளித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்காக, கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக அமெரிக்க பாப் பாடகர் ரிஹானா வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பார்ன் நடிகை மியா கலீபாவும் ஆதரவாக ட்வீட் பதிவிட்ட நிலையில், சுற்றுசூழல் செயற்பாட்டாளர் சிறுமி க்ரேட்டா தன்பெர்க்கும் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து, க்ரேட்டா தன்பெர்கிற்கு மத்திய அரசு பதிலளித்தது :

அதில்,  ”வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று அனைத்து ஊடகங்களிலும் கிரேட்டா தன்பெர்க் தனது கருத்துக்காக கவனம் பெற்றதுடன் டுவிட்டரில் மக்களால் அவரது பெயர் ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டர் பதிவிட்டிருந்த, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர்.