1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:46 IST)

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு..பிரபல நடிகைக்கு குவியும் எதிர்ப்புகள்

டெல்லியில் விவசாயிகள் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆண்டித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல போர்னோ நடிகையன மியா கலீஃபாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மனித உரிமை மீறல்… புதுடெல்லியில் இணையத்தொடர்ப்புகள் துண்டிக்கப்பட்டதா? நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஆனல், இவருக்கு எதிரான நெட்டிசன்கள் எதிர்ப்புத்தெரிவித்து டுவீட் பதிவிட்டுவருகின்றனர்.

ஏற்கனவே,பாடகி ரிஹானா, டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தலைவி பட நாயகி, கங்கனா, அவரை முட்டாள் எனக்கூறியதுடன் , அவர்கள் விவசாயிகள் அல்ல, நாட்டைத்துண்டாட முயல்கிற தீவிராவதிகள் எனக் கூறியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.