செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (17:13 IST)

எகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடை பார்வையாளர்களுக்காக திறக்க உள்ளது அந்நாடு.

அந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாடு இவ்வாறாக திட்டமிட்டுள்ளது.

ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது.

கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் இந்த பிரமிட் கட்டப்பட்டது.

54 டிகிரி கோணம் வளைந்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரமிட்.
மெல்லிய களிமண்ணால் கட்டப்பட்ட இந்தப் பிரமிடின் ஸ்திரத்தன்மை மோசமாக இருந்ததால், தொழில்நுட்பம் கொண்டு இது இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 


இப்போது பார்வையாளர்கள் 79 மீட்டர் குறுகிய பாதையில் உள்ளே ஏறி இந்தப் பிரமிடை காணலாம்.