தொடர்புடைய செய்திகள்
- யுக்ரேன் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ரஷ்ய படையெடுப்பு பற்றிய முக்கிய தகவல்!
- யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா குண்டு மழை
- யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமா?
- யுக்ரேன் தலைநகரில் 5 முதல் 6 குண்டுவெடிப்புகள்
- ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: குடிமக்களை கேட்டுக்கொண்ட யுக்ரேன்
யுக்ரேன் தலைநகர் கீவில் குண்டு வெடிப்பு
யுக்ரேன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும், மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக, அந்நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது.
இரு குண்டு வெடிப்புகளை கேட்டதாக, உள்துறை முன்னாள் துணை அமைச்சர் ஆன்டன் ஹெராஷ்சென்கோ கூறியுள்ளதாக, யுக்ரேனின் யூனியன் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், தாழ்வாகவும் குறைந்த வேகத்திலும் பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து யுக்ரேன் ராணுவம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
அடுத்த கட்டுரையில்