1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (12:00 IST)

தமிழகத்தில் ஊழல் இருந்தால் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருப்பது ஏற்கத்தக்கதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.



ஒவ்வொரு சம்பவத்துக்கும் மத்திய அரசிலிருந்து ஒரு குழு ஆய்வுக்கு வந்து விட்டு ஆட்சி எல்லாமே மிக சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்லி சென்றார்களே அது வேறு தமிழ் நாடா. இதே தமிழ் நாடு இதே மத்திய அரசு குழுக்கள்தானே.``என்று கேள்வி எழுப்புகிறார் சுப்புலஷ்மி என்னும் முகநூல் நேயர்.



`அமித்ஷா கூறியிருப்பது உண்மைதான். பெரும்பாலன அரசு காரியங்கள் லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கிறது. குப்பை தொட்டிகள் முதல் கோபுரம் கட்டுவது வரை ஒப்பந்தங்களை போட்டு அதில் கமிஷனை சுருட்டிக்கொள்கிறார்கள். திறப்பு விழா காணும் முன்னரே பாலங்களில் விரிசல்கள் விழுந்த காட்சிகள் எல்லாம் அதிகம் கண்டுவிட்டது தமிழகம். ஓட்டுக்கு காசை வாங்கிவிட்டதால் மக்கள் கேள்வி கேட்கும் தகுதியை இழந்து நிற்கிறார்கள்`` என்று சொல்கிறார் நெல்லை.டி.முத்துசெல்வம் என்னும் முகநூல் நேயர்.




`கருப்பு கண்ணாடி வழியே காணும்போது பாலும் கருப்பாகவே தெரியும் என்பது போல், ஊழல் ஊழல் என்று ஊரை எல்லாம் நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்தோர், தூக்கத்தில் கனவு விரவில்லை என்றாலும் எதிர்க்கட்சியின் ஊழலே காரணம் என்பர்.`` என்கிறார் சக்தி சரவணன் என்னும் நேயர்.



`ஆமாம்!உண்மைதான்!ஏன் மத்திய அரசு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.வாய் திறக்கவில்லை. குற்றவாளியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதால் பாஜகவும் ஊழல்வாதிதான்`` என்ற தனது கருத்தை பகிர்ந்துள்ளார் ஸ்ரீனிவாசன் புலி என்னும் நேயர்.



`` குழந்தை சாப்பிடவேண்டுமென்பதற்காக நிலவில் "பாட்டி வடை சுடுகிறது பார்" என்று தாய் பொய் சொல்வதில்லையா? அதுபோலத்தான்...பாஜக தமிழகத்தில் காலூன்ற இதுபோன்ற பொய்களை சொல்லித்தான் ஆகவேண்டும்`` என்கிறார் குலாம் மொஹிதீன் என்னும் முகநூல் நேயர்



``ஜெயலலிதா இறந்தபின் தமிழ்நாடு இவர்கள் பிடியில்தான் உள்ளது. அதற்கு பின் எத்தனை ரைடுகள். எதிலாவது உண்மை நிலையை மக்களுக்கு தெரியும்படி வெளிக்கொண்டுவந்ததுண்டா??`` என்று கேள்வி எழுப்புகிறார் தங்கம் தங்கம் என்னும் நேயர்.



``சரிதான். தற்போது தமிழகத்தை ஆள்வது அவர்கள்தானே. பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊழல் அதிகமாகயிருப்பது உண்மைதானே``என்கிறார் மன்சூரலி என்னும் நேயர்.




``ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் ஆட்சியை கலைக்கவேண்டியது தானே அதிகாரம் உங்கள் கையில் தான இருக்கு`` என்று கேள்வி எழுப்புகிறார் முகமத் ரில்வான் குலாம் என்னும் முகநூல் நேயர்.

``அமித்ஷா இதை உணர்வுடன் உண்மையாக கூறியிருந்தால், மோடியிடம் சொல்லி இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லலாமே!`` என்கிறார் பன்னீர் செல்வம் லோகநாதன் என்னும் நேயர்