திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (17:50 IST)

நான் கூறியது சரிதான் ; அடம்பிடிக்கும் ஹெச்.ராஜா : வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அமித்ஷா பேசிய மேடையில் சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என தவறாக மொழிபெயர்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தான் கூறியது சரிதான் என்பது போல் மீண்டும் கருத்து தெரிவித்தார்.

 
சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா பாஜக தொண்டர்கள் முன் பேசினார். அவர் ஹிந்தியில் பேச, ஹெச்.ராஜா அதை தமிழில் மொழி பெயர்த்து கூறினார். அப்போது, மைக்ரோ இர்ரிகேஷன் திட்டத்திற்கு ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமித்ஷா பேசினார். உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்றுதான் அதை ராஜா மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்தார். இதனை கேட்டுக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும், 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கதில், மைக்ரோ என்ற சொல்லுக்கு சிறிய, நுண்ணிய, நுண் என்றெல்லாம் அர்த்தம் உண்டு என்று கூறுவது போல் ஒரு டிவிட்டை பதிவு செய்திருந்தார்.
 
மைக்ரோ என்கிற வார்த்தைக்கு சிறிய, நுன்ணிய என்ற அர்த்தம் சரிதான். ஆனால், மைக்ரோ இரிகேஷன் என்ற வார்த்தைக்கு சொட்டு நீர் பாசனம் என்பதுதான் சரியான வார்த்தை. இது கூட தெரியாமல் ராஜா மீண்டும் முட்டு கொடுத்ததால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் தப்பாக உளறியதும் இல்லாமல், அதை சரி என மீண்டும் கூறுகிறார்களா எனக்கூறி ஹெச்.ராஜாவை மீண்டும் கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.