1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vk sasikala comment about ops joined in dmk

இதுக்கெல்லாம் காரணம் பழனிச்சாமிதான்!.. ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது பற்றி சசிகலா டிவி

ops
அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் இன்று தன்னை திமுகவில் இணைத்துகொண்டிருந்தார். இது தொடர்பாக விகே சசிகலா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழக முன்னாள் முதலவரும்,  அதிமுகவின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது' என எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘ வருகிற சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி’ எனவும் அதில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா ஓபிஎஸ்?!.. பரபர அப்டேட்..