வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (14:04 IST)

சின்னபுள்ளத்தனமா இருக்கு : தமிழிசையை விளாசிய மூடர் கூடம் இயக்குனர்

வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி வைப்பது என்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார். 

 
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  மழை இல்லாமல் வறட்சியாக இருந்த தமிழகத்தில் அமித்ஷாவின் வருகையால் மழை பெய்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி அந்த நீரில் தாமரை மலரும் என்று கூறினார். 
 
தமிழிசையின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தனது டிவிட்டர் பகக்த்தில் “ஒரு காலத்தில் கழுதைக்கு கல்யாணம் பண்ணிவச்சா மழை வரும்னு நம்பிட்டிருந்த நம்ம ஊரு மக்கள் இன்னமும் அப்படியே முட்டாளுங்களா இருப்பாங்கனு நீங்க நெனைக்கறது ரொம்ப சின்னபுள்ளதனமா இருக்கு” என டிவிட் செய்துள்ளார்.