ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (13:41 IST)

அமித்ஷாவால் மழை பெய்தது...குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என்றும் அந்த மழை நீரில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார்.
 
விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்தியாவிலே அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் தான் என்றார். தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு அனைத்தும் ஒழிக்கப்படும் என்றார்.
 
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அமித்ஷா சென்னைக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
 
தமிழகத்தில் பாஜக வலுவான நிலையில் உள்ளதால் வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என தமிழிசை நம்பிக்கையோடு பேசினார். 
மேலும் மழை இல்லாமல் வறட்சியாக இருந்த தமிழகத்தில் அமித்ஷாவின் வருகையால் மழை பெய்ததாகவும், இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி அந்த நீரில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறினார். தமிழிசையின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.