சட்டசபை வளாகத்தில் கரண்ட் மீட்டரை போட்டுடைத்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
புதுச்சேரியின் சட்டசபை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கரண்ட் மீட்டரில் குளறுபடி இருப்பதனால் அதனை போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள 4 லட்சத்து 44 ஆயிரம் மின் இணைப்புகளும் மாற்றப்பட்டு, புதிய டிஜிட்டல் மின் மீட்டரைப் பொருத்தப்பட்டது. இந்த மீட்டர் அனைத்தும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. முன்பு 1000 ரூபாய் கட்டி வந்த பொதுமக்கள், புது மீட்டரை பொருத்திய பிறகு 4000, 5000 என கரண்ட் பில் கட்டி வருகின்றனர்.
இதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளான மக்கள் இது குறித்து ஏராளமான புகார்கள் அளித்தும் எந்த பயனும் இல்லை.
இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் முன் திரண்ட அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன் வையாபுரி மற்றும் அதிமுகவினர் புதிய மின் மீட்டர்களை உடைத்தனர். மேலும் புதிய டிஜிட்டல் மீட்டரை மாற்றி புதிய மீட்டர் கருவிகளை பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.