தொடர்புடைய செய்திகள்
- பந்து என நினைத்து கையெறி குண்டில் விளையாட்டு! – பாகிஸ்தானில் சிறுவர்கள் பலி!
- இலங்கையை வீழ்த்த இந்தியாவின் சி டீம் போதும்… பாகிஸ்தான் வீரர் கருத்து!
- 11 நாடுகளுக்கான தடையை நீக்கியது சவுதி அரேபியா: இந்தியா நிலை என்ன?
- நான் ஒன்றும் முட்டாள் இல்லை… வாசிம் அக்ரம் விளாசல்!
- இவர்தான் நம்பர் 1 பேட்ஸ் மேன்- பாகிஸ்தான் வீரர் புகழாரம்
பாகிஸ்தானில் 2 ரயில்கள் மோதல்: 25 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.
இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெட்டிகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அடுத்த கட்டுரையில்