வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (10:30 IST)

பந்து என நினைத்து கையெறி குண்டில் விளையாட்டு! – பாகிஸ்தானில் சிறுவர்கள் பலி!

பாகிஸ்தானில் கையெறி குண்டை விளையாடும் பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்கள் குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குவேட்டா நகரின் குடியிருப்பு பகுதியில் கையெறி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதை விளையாடும் பந்து என நினைத்த அப்பகுதி சிறுவர்கள் மூவர் அதை வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கையெறி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் கையெறி குண்டு எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.