1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. US Secretly Strikes Iran's Qeshm Island Amid Trump's Peaceful Settlement Signals

ஹோர்முஸ் ஜலசந்தியின் தீவில் ரகசிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. ஈரான் கடும் கோபம்..

US Strikes Iran
ஹோர்முஸ் ஜலசந்தியின் மிகப்பெரிய தீவான ஈரானின் கெஷ்ம்  தீவு மீது அமெரிக்கா ரகசியமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே அண்மைக்காலமாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
 
கெஷ்ம் தீவில் தொடர்ச்சியாக ஐந்து வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், தீவின் மேல் இரண்டு விமானங்கள் பறந்ததை மக்கள் பார்த்ததாகவும் ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான 'ஐஆர்என்ஏ'  தெரிவித்துள்ளது. 
 
அமெரிக்க சொத்துக்கள் மீது தரைப்படை ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரானியர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நிலையிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. "ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது" என டிரம்ப் தனது சோஷியல் மீடியா தளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அதேவேளையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துமாறு டிரம்பிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கரையை கடந்தது முரசு புயல்... இருப்பினும் 11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை...