1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. UPI Transactions Surge 32% During Diwali Season Driven by Festive Purchases

தீபாவளி தினத்தில் 91.69 கோடி பண பரிவர்த்தனை.. வரலாற்று சாதனை செய்த யுபிஐ ...

யுபிஐ பரிவர்த்தனை
பண்டிகைக் கால கொள்முதல் மற்றும் தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக, இந்தியாவில் யுபிஐ மூலமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் அளவு 32 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு தீபாவளியின் போது 69.57 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனை அளவு, இந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று 91.69 கோடியாக உயர்ந்துள்ளது.
 
குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய நாளில் மட்டும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 97.58 கோடியைத் தொட்டதுடன், இதன் மூலம் ரூ. 1,36,118 கோடி மதிப்பிலான பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பண்டிகைக் காலக் கொள்முதல் உச்சத்தை எட்டியதன் காரணமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ. 31.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
 
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை, நாட்டின் நிதித் துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016-17 நிதியாண்டில் வெறும் ரூ. 0.07 லட்சம் கோடியாக இருந்த இதன் பரிவர்த்தனை மதிப்பு, 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ. 314 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது 4,000 மடங்குக்கும் அதிகமான வியக்கத்தக்க வளர்ச்சியாகும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய்யின் அடுத்த விசிட் திருச்சி.. தேதி அறிவிப்பு.. ரோட்ஷோவுக்கு திட்டம்...