கடும் எதிர்ப்பு எதிரொலி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் கொண்டு வரும் முடிவு ஒத்திவைப்பு?
நாடு முழுவதும் யுபிஐ மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% எம்டிஆர் கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறை வரும் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரூ. 3,000 செலுத்தும்போது ரூ. 12-ம், ரூ. 50,000-க்கு ரூ. 200-ம் வணிகர்கள் கட்டணமாக செலுத்த நேரிடும். அதிகபட்சமாக கட்டண உச்சவரம்பு ரூ. 300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆயுதபூஜை, தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலம் தொடங்கவுள்ள நிலையில், இக்கட்டண முறை அமலானால் தங்களின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என வணிகர்கள் எதிர்ப்பும் போராட்டமும் தெரிவித்து வருகின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் ஏற்கனவே வணிகம் மந்தமாக உள்ள சூழலில், கட்டண வசூலை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜனவரி 2027 வரை யுபிஐ கட்டண முறையை ஒத்திவைப்பது குறித்து இந்திய தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

