ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (10:59 IST)

வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜால், விசாரணையை நிறுத்திய நீதிபதி: நடந்தது என்ன??

போதை பொருள் தொடர்பான வழக்கை விசாரிக்கும்போது வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜால் விசாரணையை நிறுத்தினார் நீதிபதி.

பாகிஸ்தானின் முன்னாள் சட்டதுறை அமைச்சர் ராணா சனவுல்லா மீது போதை பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மசூத் அர்சத், ராணா சனவுல்லாவின் காரில் இருந்து 15 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்வது தொடர்பான வீடியோ காட்சியை பார்த்தார். பின்பு அந்த வீடியோவில் ஹெராயின் பறிமுதல் செய்வதை உறுதிபடுத்தவதாக காட்சிகள் இல்லாததால் ராணாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது திடீரென நீதிபதிக்கு வாட்ஸ் ஆப்-ல் ஒரு உத்தரவு வந்தது. அதில் அவர் லாகூர் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்ய்ப்பட்டதாகவும், இந்த வழக்கு விசாரணையை உடனே நிறுத்துமாறும் அதில் கூறப்பட்டிருந்தது. உடனே அவர் விசாரிப்பதை நிறுத்தினார்.

இவ்வாறு விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது நீதிபதியை மாற்றம் செய்வது இதுவே முதல் முறை என்றும், எதிர்கட்சியான முஸ்லீம் லீக்கை சேர்ந்த ராணா மீது போடப்பட்ட போலி வழக்கில், அவருக்கு சாதகமாக ஜாமீன் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் இவ்வாறு செய்து வருகிறார்கள் எனவும் பாகிஸ்தானின் மூத்த வக்கில் ஒருவர் குற்றம் சாடியுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசிப், ”பிரதமர் இம்ரான் கான், நீதித்துறை மீது கடுமையான தாக்குதலை தொடுத்து இருக்கிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.