நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்!!!
பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
’கஸ்னவி’ எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நள்ளிரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை 290 கி.மீ.வரை பல வகையான ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் சக்தி உடையது எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் ஐ.எஸ்.பி.ஆர். இயக்குனர் ஆசிப் காபூர் தனது டிவிட்டர் பக்கத்தில், கஸ்ணவி எனும் பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்றிரவு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.