வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வெள்ளி, 12 டிசம்பர் 2025 (20:41 IST)

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

bussy anand
ஒவ்வொரு கட்சியிலும் உட்கட்சி பூசல் இருப்பது போல நடிகர் விஜய் துவங்கிய தவெக கட்சியிலும் உட்கட்சி பூசல் துவங்கியிருக்கிறது. தவெகவில் தலைமையான விஜயை சுலபமாக அணுக முடியவில்லை. நிர்வாகிகள் கூட விஜயை சந்திக்க முடியவில்லை. விஜய்க்கு அடுத்து புஸ்ஸி ஆனந்தே முக்கிய தலைவராக இருக்கிறார்.

அவர் மீது புகார் சொல்வது என்றால் யாரிடம் சொல்வது என தெரியவில்லை. என புகார்கள் எழுந்து வருகிறது. விஜய் கட்சி துவங்கியது முதலே இது நடக்கிறது. ஆனால், விஜய் இதையெல்லாம் கண்டுகொள்வது இல்லை. அல்லது விஜய்க்கு இதை யாரும் சொல்வதில்லை என்றும் புரிந்துகொள்ளலாம்.  

தவெக நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் இடையே பெரிய தடையாக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார் என்கிற புகாரை தாடி பாலாஜி கூட சொல்லியிருந்தார். அவரின் வீடியோக்கள் வெளியான பின்னரும் விஜய் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில்தான், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் புஸ்ஸி ஆனந்த் மீது புகார் சொல்லி தவெகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சமீபத்தில், புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடந்தபோது விஜய் அதில் கலந்துகொண்டு பேசினர். போலீசார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருந்தார்கள். அதுவும் QR Code அனுமதியுடன் தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அருண்ராஜ் ‘புதுச்சேரி கூட்டத்திற்கு சென்றபோது நான் பாஸ் எடுத்து செல்லவில்லை. மைதானத்திற்கு வெளியே இருந்து நான் புஸ்ஸி ஆனந்துக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.. என் செல்போன் எண்ணை பார்த்த பின்னரும் அவர் போனை எடுக்கவில்லை. விஜய் சாருடன் தினமும் பேசி வரும் எனக்கே இந்த நிலையா?’ என அவர் கேள்வி எழுப்பினார்.