மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
2011 தேர்தல் பரப்புரையில் தமிழகத்தில் உள்ள மகளிர்க்கு உரிமை தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக அறிவித்தது. அதேநேரம் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கழித்து அந்த உரிமை தொகையை மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. அதிலும் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
இது கடும் விமர்சனத்தை கிளப்புவே முதல் முறை நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக மீண்டும் விண்ணப்பத்தவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்ததோடு இன்று அதை தொடங்கியும் வைத்தார். அதில் முதல் கட்டமாக 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
இது தொடர்பான விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துபவர்கள் கூட அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த தொடங்கி விட்டார்கள். தலைநிமிறும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்த நடை போட நிச்சயம் மகளிர் உரிமை தொகையும் உயரும்.. பெண்களின் உரிமையும் உயரும் என்று பேசியிருக்கிறார்.
முதல்வர் அறிவிப்பை பார்க்கும்போது திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் மகளிர் உரிமை தொகை அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.