ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:34 IST)

பாகிஸ்தானில் பரவும் கொடிய நோய் – மக்கள் பீதி

இதுவரை உலகநாடுகள் பலவற்றையும் உலுக்கியெடுத்த கொடிய நோயான எய்ட்ஸ் தற்போது பாகிஸ்தானில் வேகமாக பரவி வருகிறது.

பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பஞ்சாப் பகுதியில் ஹெச்ஐவி நோய் எனப்படும் எய்ட்ஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. 2000ம் ஆண்டுகளில் உலக நாடுகளை அச்சுறுத்திய இந்த நோயால் பலர் இறந்து போனார்கள். நீண்ட நாட்களாகியும் அந்த நோய்க்கு இன்றுவரை முழுமையாக குணமாக்க கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஷாஹ்கோட் பகுதியில் எயிட்ஸ் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாக அதிர்ச்சிகரமான டஹ்கவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் எயிட்ஸ் நோயால் 85 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆசியாவில் அதிகமாக எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வரும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இரண்டு வருடத்திற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் 20 ஆயிரம் பேருக்கு எடிட்ஸ் நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.