ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:52 IST)

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை - ராஜ்நாத் சிங்

சமீபத்தில்  காஷ்மீர்ல் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அந்நாடு ஐநா சபையிலும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாகிஸ்தான்  தோல்வியே தழுவியது.  இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீருக்கு எந்த உரிமையும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் லடாக் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இன்று லடாக் சென்றார். அங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிகச்ச்சியில் கலந்துகொண்டார்.
 
அப்போது கூறியதாவது : இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் நாடு முயற்சிக்கும் போது இந்தியா எப்படி பாகிஸ்தானுன் பேச முடியும்? பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்திவருகிறது. இந்தியாவுக்கும் பயங்கரவாதத்தை கொண்டுவருவதை நிறுத்த வேண்டும்.காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்தார்.