செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (16:32 IST)

’விடுகதையா இந்த வாழ்க்கை?’ கடனால் ரோட்டுக் கடை வைத்த தொழிலதிபர்!

China
சீனாவில் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தொழிலதிபர் ஒருவர் ரோட்டுக்கடை வைக்கும் நிலைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் புதிது புதிதாக முளைக்கும் தொழிலதிபர்கள் பலர் கோடிகளில் வங்கி கடன் பெறுவதும், பின்னர் அதை அடைக்க முடியாமல் வேறு நாட்டுக்கு தப்பி செல்வதும் சமீப கால வாடிக்கையாக மாறி வருகிறது. ஆனால் இதற்கு மாறாக சீனாவில் நடந்துள்ளது ஒரு சம்பவம்.

சீனாவில் டாங் ஜியான் என்ற நபர் பெரிய ரெஸ்டாரண்டுகள், கட்டுமான நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். தனது தொழிலை விரிவுப்படுத்த சீன வங்கி ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் நினைத்தபடி தொழில் அவ்வளவு சிறப்பாக போகவில்லை போல தெரிகிறது. இதனால் நஷ்டமடைந்தாலும் வங்கி கடனை கட்ட வேண்டும் என அவரால் முயன்ற மட்டும் முயன்றுள்ளார்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.52 கோடி கடன் பாக்கி இருந்ததால் அவரது அனைத்து சொத்துகளையும் விற்று கடனை பைசல் செய்துள்ளார். ஆனாலும் கடன் தீர்ந்தபாடில்லை. ஆனாலும் மனம் தளராமல் கடனை அடைக்காமல் விட மாட்டேன் என களமிறங்கிய ஜியான் சீனாவின் ஹன்சோவ் பகுதியில் ஒரு ரோட்டுக்கடையை தொடங்கி அதில் சாண்ட்விச், சாசேஜ் போன்றவற்றை விற்று வருகிறாராம். இதில் வரும் சம்பாத்தியத்தை கொண்டு மீத கடனை அடைக்க உள்ளாராம். கடனால் அவர் சொத்துகளை இழந்தாலும் தளராத அவர் முயற்சி கண்டு பலரும் வியந்துள்ளனர்.

Edit By Prasanth.K