1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2024 (16:13 IST)

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

kanimozhi
வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இந்த தினம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த தினத்தில் திமுக எம் பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்.


Edited by Mahendran