திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (19:32 IST)

சீனாவில் பிரபல தொழிற்சாலையில் தீவிபத்து!2 பேர்பலி

china fire
சீன நாட்டில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா நாட்டில் பிரதமர் ஜி ஜிங்பிங் தலைமையிலான சீன மக்கள் குடியரசு கட்சியின் ஆட்சி  நடந்து வருகிறது.

இங்குள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள வென் ஹாங்க் மாகாணத்தில் இயங்கி வரும் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்து வரும் தொழிற்சாலையில்  நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில், தொழிற்சாலை முழுவதும் தீ  பரவியதால், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விபத்து குறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கப் போராடினர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து, போலீஸர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj