வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (16:11 IST)

10 நாட்களாக வட்டமாக சுற்றி வரும் ஆடுகள்! – வைரலான வீடியோவால் பீதி!

Goats
சீனாவில் பண்ணை ஒன்றில் ஆடுகள் வட்டமாக 10 நாட்களுக்கும் மேலாக சுற்றி வந்ததாக வெளியாகியுள்ள வீடியோ பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் சில மர்மமான விஷயங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில கேமராக்களில் பதிவாகி விடும்போது அது பெரும் வைரலாகி பேசுபொருளாகிறது. அப்படியாக தற்போது சீனாவில் பண்ணை ஒன்றில் நடந்த மர்ம சம்பவம் வைரலாகியுள்ளது.

வடக்கு சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் செம்மறி ஆடுகள் பண்ணை வைத்துள்ளவர் மியோ. இவரது செம்மறி ஆட்டு மந்தையில் ஏராளமான ஆடுகளை வைத்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சில ஆடுகள் வட்ட வடிவில் பண்ணையை குற்றி வந்துள்ளன.

சுமார் 10 நாட்களாக அந்த ஆடுகள் இவ்வாறு தொடர்ந்து இரவு நேரங்களில் வட்ட வடிவில் சுற்றி வந்ததாக பண்ணை உரிமையாளர் கூறியுள்ளார். ஆடுகள் அவ்வாறு விசித்திரமாக நடந்து கொண்டது ஏன் என்பது புரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K