97 ரோஹிங்கியா முஸ்லீம்கள் நீரில் மூழ்கி மரணம்!!
மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக வன்முறைகள் தூண்டப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ரோஹிங்கியா ஆயுத கிளர்ச்சி குழு, காவல் மற்றும் ராணுவ அரண்களை தாக்கியதின் காரணமாக, ரோஹிங்கியா கிராமங்களில் நுழைந்த மியான்மர் ராணுவமும் புத்த பேரினவாதிகளும் ஆயிரக்கணக்கான வீடுகளை எரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வன்முறை காரணமாக, 3,70,000 ரோஹிங்கியா இன மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
நிலம் மற்றும் கடல் வழியாகவும் மியான்மர் எல்லையில் உள்ள நாப் ஆற்றின் வழியாக வங்கதேசத்தில் தஞ்சமடைகின்றனர்.
இவ்வாறான முயற்சியின் போது 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.