வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (10:00 IST)

படகு கவிழ்ந்து 28 பேர் மரணம் - உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சி

உத்திரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்ததால் மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர். 


 

 
உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் இருந்து அரியானா மாநிலத்திற்கு நேற்று ஒரு படகு சென்றது. அதில், 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.  அந்த படகு 20 கி.மீட்ட தூரத்தில் கதா என்கிற கிராமத்திற்கு அருகே யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. 
 
இதனால், அந்த படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மீட்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 15 பேரை உயிரோடு மீட்டனர். ஆனால், 28 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு, 17 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்தை, உத்தரபிரதேச அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.