ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (18:20 IST)

பிரபல பழம்பெரும் நடிகர் ஆர்.என். சுதர்சன் மரணம்

தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் ஆர்.என். சுதர்சன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு  வயது 78. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

 
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். நாயகன், பாயும்புலி, வேலைக்காரன், தீர்ப்பு, சுமதி என் சுந்தரி, புன்னகை மன்னன், ரமணா உள்ளிட்ட தமிழ் படங்களில் ஆர்.என்.சுதர்சன் நடித்துள்ளார். மற்ற மொழிகளையும் சேர்த்து 250 படங்களில் நடித்துள்ளார்.
 
சுதர்சன் 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்.