புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (14:30 IST)

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய வரவாக தொலைக்காட்சி தொகுப்பாளினி வந்துள்ளார்.


 

 
பிக்பாஸ் வீட்டில் தற்போது பல அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை சுஜா வருணி சென்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஹரீஸ் கல்யாண் சென்றார். உள்ளே சென்ற அன்றே தனக்கு எதாவது சமைத்துக் கொடுங்கள். அதுதான் உங்களுக்கு பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க் எனக்கூறி அங்கிருந்த பெண்களை ஓடவிட்டார் ஹரீஸ். அதன் பின் சும்மா சொன்னேன் எனக்கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
 
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வரவாக ஆட்டோவில் ஒரு பெண் வந்து இறங்கியுள்ளார். வந்தவுடன் இவர் சினேகனை கட்டிப்பிடித்து அதிரடி காட்டினார். 
 
இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர்.  மேலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலை காட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
 
ஏராளமான புதிய வரவுகள் வந்துள்ளதால் பிக்பாஸ் கலை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.