ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 15 பிப்ரவரி 2026 (19:30 IST)

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

jananayagan
விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதோடு இது தொடர்பாக தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக படத்தின் ரிலீஸுக்கு தீர்வு எட்டப்படவில்லை.

தற்போது படம் மறு தணிக்கையில் இருக்கிறது.. அதேநேரம் எப்போது படம் பார்த்து தணிக்கை சான்றிதழை கொடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த மாதம் இறுதிக்குள் இந்த படம் வெளியாகவில்லை என்றால் வருகிற மே மாதம்தான் வெளியாகும் என சிலர் சொல்கிறார்கள். ஒருபக்கம் இந்த படத்தை பற்றி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பேசினாலும் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருக்கிறார். இதன் பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

தனது அரசியலுக்கு ஜனநாயகன் பட பிரச்சனையை பயன்படுத்த வேண்டாம் என விஜய் நினைக்கிறாராம். மேலும் ஜனநாயகன் படத்தை பற்றி கருத்தை தெரிவித்து அது சிலருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி ஜனநாயகன் படத்திற்கு மேலும் சிக்கல் ஏற்படும் எனவும் விஜய் கருதுகிறாராம். அதனால்தான் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருக்கிறார் என சொல்லப்படுகிறது..