1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (19:08 IST)

சினிமாவில் நடிப்பதை ஏன் தவிர்க்கிறார் ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா சினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் ஓவியா வெளியேறினார். அதன்பின் ஓரிரு நாள் சென்னையில் இருந்தார் ஓவியா. அதன் பின் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா சென்ற அவர், தனது தந்தையிடம் கூறிவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்று விட்டார் என செய்திகள் வெளிவந்தது. ஆனால், எந்த தகவலும் தெளிவாக தெரியவில்லை...மேலும், தன்னுடைய முடியை சிறிதாக வெட்டி ஒரு புதிய தோற்றத்தில் ஓவியா மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
 
இந்நிலையில், பல இயக்குனர்கள் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
காதல் தோல்வியிலிருந்து ஓவியா இன்னும் மீளவில்லை என்பதால்தான் சினிமாவில் நடிப்பதை அவர் தவிர்க்கிறார் எனவும், அதனால்தான் தன்னுடைய முடியை அவர் வெட்டிக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.