ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா'  நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!
சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற 'பாரதி கண்ணம்மா' தொடரின் நாயகி ரோஷினி ஹரிபிரியன், இன்று இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் என்பவரை அவர் கரம்பிடித்துள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.
 
தமது திருமணம் குறித்த தகவல்களை ரோஷினி ரகசியமாக வைத்திருந்த நிலையில், விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்த பின்னரே இச்செய்தி வெளியே தெரியவந்தது. 
 
மணக்கோலத்தில் இருக்கும் ரோஷினியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'கண்ணம்மா' கதாபாத்திரத்தின் மூலம் பலரது இதயங்களை வென்ற ரோஷினி, ஒரு இசையமைப்பாளரை மணந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் இந்த புதிய தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிப்பும் இசையும் இணைந்துள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
 
Edited by Siva