புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (11:35 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தலைமுடி வெட்டியதற்கு காரணம் இதுதானாம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். பின்னர், பல்வேறு விவகாரங்கள் காரணமாக  நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறினார். இதற்கு காரணம் ஆரவ் உடன் காதல், மனதளவில் பாதிப்பு, தலையில் அடிபட்டதால் சிகிச்சை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

 
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடிகை ஓவியா, கொச்சியில் உள்ள தனது  வீட்டிலிந்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
 
அதில், “எனக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பாகவும், ஆதரவாக இருப்பீர்கள் என நினைத்து பார்த்ததே இல்லை”. மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது. லவ் யூ கய்ஸ். எனது ஹேர் ஸ்டைல் குறித்து பல தகவல்கள் வருகின்றது. சிகிச்சைக்காக எனது  தலைமுடி வெட்டப்படவில்லை. உண்மை என்னவென்றால் விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அனுகியது. கேன்சர் நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காகவே எனது தலைமுடியை தானமாக வழங்கினேன். 
 
மேலும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனிமேல் தன்னை நிறைய படங்களில் பார்க்கலாம் என்றும்  கூறிய ஓவியா, ஆனால் தான் நடித்திருப்பதால் மட்டுமே அந்த படத்தை காணவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும்,  படம் உங்களுக்கு பிடித்திருந்தால் பாருங்கள், பிடிக்கவில்லையா காறி துப்பி விமர்சனம் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.
 
உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கும் என நம்புகிறேன். முடி வெட்டியதற்கு வேறு எந்த காரணமும் இல்லை” என அந்த  வீடியோவில் ஓவியா தெரிவித்துள்ளார்.