1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (11:30 IST)

ஐ லவ் யூ; ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ஓவியா

பிக் பாஸ் நிக்ழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா தற்போது தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தினாலும் பின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் ஓவியா. ஓவியா ஆர்மி என்றெல்லாம் ஹேஷ் டேக் உருவாக்கி ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இந்நிலையில் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
 
இதையடுத்து தற்போது ஓவியோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
இனிமேல் நான் பிக்பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன். நான் சினிமாவில் நடிக்க போகிறேன். ஆரவ் கூட காதல் இருக்கா? மன அழுத்தம் இருக்கா? என பலரும் கேட்கின்றனர். நான் மன அழுத்தத்தோடு இல்லை. ஜாலியாக இருக்கிறேன். உண்மையான காதல் தோற்காது. 
 
நான் காதலித்து கொண்டேதான் இருப்பேன். என் காதல் உண்மையானது. அதை திரும்ப பெறுவேன். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். நிறைய பேர் என்னிடம் அன்பாக இருக்கின்றனர். அனைவருக்கும் ஐ லவ் யூ.
 
சக்தி, ஜூலியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். நானும் தவறு செய்தவள்தான். மற்றவர்களை தொந்தரவு செய்யும் ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. இதனால் யாருடைய சாபத்தையும் நான் சம்பாதிக்க விரும்பவில்லை. 
 
சிகிச்சைக்காக முடி வெட்டவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அணுகினார்கள். இதனால்தான் முடி வெட்டினேன். இந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
 
என்னை யாரும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எல்லோருடனும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வீடியோ மூலம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன் என்றார்.
 
மேலும் என்னிடம் கேள்விகளை கேட்க விரும்புவர்கள் டுவிட்டர், சமூக வலைதளங்கள் மூலம் கேட்கலாம் என்றார்.