புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (18:10 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது வரவு நடிகை சுஜா வருணியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது நடிகை ஒருவரை பிக்பாஸ் வீட்டிற்கு யாரை அழைத்து வரப் போகிறார்கள் என்பதுதான் சமீப காலப் பேச்சாக இருந்தது. ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகின்றது.

 
பார்வையாளர்களின் உண்மை சூழலை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நேற்று நடிகை சுஜா வருணியை உள்ளே அனுப்பினார். சமீபத்தில் வெளியான குற்றம் 23, கிடாரி, பென்சில் உட்பட தமிழ் உட்பட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா வருணேவின் வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி  காப்பாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
மேலும் இவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க ஒரு வாரத்திற்கு ரூபாய் 3 லட்சம் இந்திய ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது.