செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (12:24 IST)

தவறு செய்தால்தான் மனிதர்கள்; இல்லையெனில் விலங்குகள் - நடிகை ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நடிகை ஓவியா தனிமைப்படுத்தப்பட்டு வந்தார். ஓவியாவை தொடர்ந்து கடுமையாக  பேசிய ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி ஆகியோர் மீது நிகழ்ச்சி பார்வையாளர்கள் மற்றும் ஓவியா ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டனர்.

 
மேலும் சமூக வலைதளங்களில் ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி ஆகியோரை விமர்சித்து மீம்ஸ்கள், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாக பரவின. தற்போது, ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், ரசிகர்கள் ஜூலி, சக்தியை விமர்சிப்பது  தனக்கு ”ரொம்ப கஷ்டமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். 
 
ஜூலி மற்றும் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கிய  போது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அதே நிலை தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து  அவர்கள் மீது மோசமான கருத்துக்களை முன்வைக்காதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 
தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால் தான் மனிதர்கள், இல்லையெனில் அவர்கள் விலங்குகளுக்கு சமம். கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளை கூட அரசாங்கமே மன்னித்து விடுகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. மற்றவர்களை கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அப்படிபட்ட ரசிகர்கள் எனக்கு தேவையில்லை” என ஓவியா வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார்.