செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (16:08 IST)

ராயபுரம் ரிக் ஷாக்காரனாக மாறி கலக்கும் ஜெயகுமார்!

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் எம். சி சாலையில் உள்ள அம்மா உணவகம் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் சைக்கிள் ரிக் ஷாவில்  அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 
ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் 5 வது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  ராயபுரம் எம் சி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களிடம்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரம் எம் சி சாலையில் உள்ள அம்மா உணவகம் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் சைக்கிள் ரிக் ஷா வில் அமர்ந்து வாக்கு சேகரித்தார்.
 
முன்னதாக அம்மா உணவகத்திற்கு வந்த மாற்று திறனாளி உடன் சரிசமமாக அமர்ந்து  சிறிது நேரம் உரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். அதிமுகவின் எழுச்சி பெரும் அளவில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.  ராயபுரம் திமுக வேட்பாளர்க்கு பிரச்சாரம் செய்ய ஆள் கூட இல்லை.
 
அம்மா இல்லாத நிலையில் கண்டிப்பாக கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்கள் பெருமளவில் அதிமுக வில் இணைகின்றனர். திமுக வின் அடக்கு முறை மக்கள் மத்தியில் பெருமளவில் பேசப்படுகிறது. அதிமுக வின் மேஜிக் சிம்பல் இரட்டை இலை என்று தெரிவித்தார். மேலும் வாக்கு சேகரிப்பின் இடையே அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து அமைச்சர் ஜெயக்குமார்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குழந்தைகளை தூக்கி கொஞ்சியும் பெண்களுடன் உற்சாகமாக பேசியும் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.