1. செய்திகள்
  2. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  3. தேர்தல் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (15:33 IST)

2021 தேர்தல் சுவாரஸ்யம்: ஒரே போன் காலில் கோவை தங்கத்தை தன பக்கம் இழுத்த ஸ்டாலின்!

கோவையில் திமுக கூட்டணியை ஆதரித்தும், வேலுமணியின் ஊழலையும் கூறி கோவை மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் பேட்டி.

 
ஓபிஎஸ் என்னிடம், திருவிக நகரில் நின்றால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் எனவும், அந்த தொகுதியில் நிற்கவும் கூறினார். தங்கமணி தொலைபேசியில், தமிழக காங்கிரஸிசிலிருந்து விலகி, ஜிகே வாசனுடன், தமாகவில் இணைந்து இவ்வளவு ஆண்டு காலம் பணியாற்றினேன். அவருக்காக என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும் தயாராக இருந்தேன். ஆனால், அவர் என்னை கைவிட்டு விட்டார் என்றார். 
 
என்னை இரட்டை இலையில் நிற்க கூறினார்கள். நான் எதார்த்தமாக உண்மையை பேசினான். முதலில் எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவீர்கள் என கேட்டேன். அதை அவர்கள் வேறு மாதிரி நினைத்து கொண்டு கோபப்பட்டனர். நான் சுயேட்சையாக களம் காணலாம் என ஜிகே.வாசனிடம் கூறினேன். ஏற்கனவே ஜிகே வாசனிடம் அவர்கள் பேசி விட்டதாக கூறினார்கள். இதையடுத்து, நான் கோவைக்கு வந்து விட்டேன். இங்கு எனது ஆதரவாளர்களும், வால்பாறை மக்களும் சுயேட்சையாக நிற்கலாம் என கூறினார்கள். 
 
சுயேட்சையாக போட்டியிட நானும் தயாரானேன். அன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த செய்தியை அறிந்ததாகவும், உங்களுகே தொகுதி இல்லையா என வருத்தப்பட்டதாகவும், நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, வால்பாறை தொகுதிக்கு கேட்டதெல்லாம் நான் செய்துகொடுத்தேன் என கூறியவர், அந்த பகுதிக்கு என்ன வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் செய்து தருவேன் எனவும், சுயேட்சையாக போட்டியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்று சுயேட்சையாக போட்டியிட வில்லை.
 
திமுக 200 தொகுதியில் வெற்றி பெறும், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என்றார். திமுக ஆட்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நான் கேட்டதெல்லாம் செய்து கொடுத்தார். ஆகவே, அவர் பாசமும், அன்பும் வைத்துள்ளேன். அதனால் அவர் சொன்னதால் மறுக்காமல் ஒத்துக்கொண்டு சுயேட்சையாக போட்டியிடுவதை நிறுத்தினேன்.
 
வால்பாறை மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தளபதி மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என உறுதியாக சொல்கின்றனர். ஏனென்றால் இன்றைய தமிழகத்தில் அவர் ஒருவர் தான் நேர்மையான மனிதர். சென்னையில் கூட 9 மேம்பாலம் கட்டினார் எதுவும் குறை கூற முடியாது. டாக்டர் கலைஞர் மீதோ எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. 
 
ஆனால், இன்றைய ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என பெயர் எடுத்து விட்டது. ஆயிரக்கணக்கான கோடியில் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க டெண்டர் என்ற பெயருக்கு விட்டு, தனியாருக்கு வேலுமணி கொடுத்து  கோடி கணக்கில் ஊழல் செய்து உள்ளார் என சமூக ஆர்வலர்கள் வழக்குகள் போட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் அதிகாரிகள் எதெற்கெடுத்தாலும் வேலுமணியை பாருங்கள் என அனுப்பி விடுகின்றனர். அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
 
இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு நேர்மையான தேர்தல் நடைபெறாது. பணம்  பட்டுவாடாவும் நடைபெறுகின்றது. தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்துள்ளேன். நான் ஓரிரு நாளில் சுற்றுபயணத்தை துவங்க உள்ளேன். வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டம் முழுவதும் சென்று திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், வேலுமணியின் ஊழலையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி வாக்குசேகரிக்க உள்ளேன். என்னுடன் உள்ளோர் ஒன்றாக களம் இறங்க உள்ளோம். தளபதி ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். வேலுமணி அவர் எய்த ஊழலுக்காக சிறை செல்ல வேண்டும் என்று கூறினார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்கு மாவட்ட தாமக தலைவர்  ஆர்.ரவிச்சந்திரன், மாநில இளைஞரணி துணைத்ததலைவர் அருண் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.