செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (11:56 IST)

சோழிங்கநல்லூர் தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் கே.பி. கந்தன் பரப்புரை !

சோழிங்கநல்லூர் தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் கே.பி. கந்தன் பெருங்குடி 186 வது வட்டத்திற்கு உட்பட்ட காமராஜர் நகர் குறிஞ்சிநகர் வீர வாஞ்சிநாதன் தெரு ராமப்பா நகர் திருமலை நகர் போன்ற பகுதிகளில் திறந்த வேனில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
 
முன்னதாக பெருங்குடியில் அமைந்துள்ள வேம்புலி அம்மன் கோவிலில் பூஜை செய்து அம்மனை வழிபட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பரப்புரையின் போது ஏராளமான பெண்கள் புடைசூழ ஆரவாரத்துடன் கலந்து கொண்டனர். 
 
தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஜி.எம். ஜானகிராமன் முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.வி. நாராயணன், அமைப்பு சாரா ஓட்டுநர் பொறுப்பாளர் அசோக்குமார் , மெட்ரோ குமார், காமராஜ், ஏழுமலை, அமரன், ஜெயபால் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் இதர கூட்டணி பொறுப்பாளர்களும் மற்றும் ஏராளமான பெண்கள் இரட்டை இலை  வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்.