செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (08:59 IST)

ஐயா.. இந்த வருஷமும் பாஸ் போட்டுவிடுங்க.. சமயம் பாத்து அடிக்கிறீங்களேப்பா! – ஓபிஎஸ் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் மாணவர்கள் ஆல் பாஸ் செய்ய சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் அதிமுகவிலிருந்து போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுவட்டார பகுதிகளான உப்பார்பட்டி, சீலையம்பட்டி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் “அதிமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேறக்கூடிய அம்சங்களை அறிக்கையாக அளித்துள்ளோம். திமுக பொய் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. திமுக கள்ள நோட்டு. அதிமுகதான் நல்ல நோட்டு” என பேசினார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மாணவர்கள் சிலர் “ஐயா.. இந்த தடவை 12வது ஆல் பாஸ் போடுங்க” என கேட்க அதுகுறித்து முதல்வருடன் கண்டிப்பாக ஆலோசிப்பதாக ஓபிஎஸ் வாக்குறுதி அளித்தார். அப்போது இன்னொரு இளைஞர் கூட்டம் “ஐயா.. விளையாட மைதானம் கட்டி தாங்க” என கேட்க, சிரித்துக் கொண்டே “கண்டிப்பாக செய்து தருகிறேன். சமயம் பாத்து அடிக்கிறீங்களேப்பா” என  கூறி சென்றுள்ளார் ஓபிஎஸ்.