Daily Horoscope
✕

எதிர்பார்ப்பு மிகுந்த ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட் டிரைலர் வெளியீடு

Updated: புதன், 29 ஜூலை 2026 (11:12 IST)
ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற கற்பனை மற்றும் சாகசத் திரைப்படத் தொடரான  ஜுமாஞ்சி  வரிசையில், அடுத்து வெளியாகவுள்ள புதிய திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட்  எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், முந்தைய பாகங்களை விட மிக பிரம்மாண்டமான பொருட்செலவிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் உருவாக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவரும் வகையில், மிகவும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் இத்திரைப்படத்தை இயக்குநர் ஜேக் காஸ்டன் இயக்கி வருகிறார்.
 
இத்திரைப்படத்தில் உலகப் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரமான டுவைன் ஜான்சன், அதாவது  தி ராக் , மீண்டும் கதையின் முதன்மை கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். அவருடன் இணைந்து முந்தைய பாகங்களில் ரசிகர்களைத் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் கவர்ந்த ஜாக் பிளாக், கெவின் ஹார்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்திய கரேன் கில்டன் ஆகியோர் மீண்டும் இப்படத்தில் களம் இறங்கியுள்ளனர். 
 
அந்தப் படங்களின் அபார வெற்றி தந்த உற்சாகத்தில், தற்போது உருவாகியுள்ள  ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட்  படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.  
 
திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு புதிய  அனுபவத்தைக் கொடுக்கத் தயாராகிவரும் இத்திரைப்படத்தை, வரும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை க்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
About Author
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More

எல்லாம் காட்டு

விஜய்க்கு கொண்டாட்டங்களில் விருப்பமில்லை, ஆனால்...ரஷ்மிகா மந்தனா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இன்று 3 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..

மோகன் ராஜா - கார்த்தி படத்துக்கு ரஜினி பட தலைப்பு!... விரைவில் ஷூட்டிங் ஸ்டார்ட்..

இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்..

Sigma Box Office: சிக்மா 2 ம் நாள் வசூல் நிலவரம்

அடுத்த கட்டுரையில்
Show comments