1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:21 IST)

மூன்று நாட்களாக சோனு வீட்டில் ரெய்டு! – ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா?

பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் நடந்த ரெய்டில் அவர் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் எண்ணற்ற உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் அவரது மும்பை வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சோனுசூட் ரூ.20 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் பஞ்சாப் தேர்தலில் சோனு சூட் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானதால் திட்டமிட்டு இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.