வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (22:43 IST)

சென்னை கிங்ஸ் அணிக்காக சிம்பு பாடிய பாடல்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை நடிகர் சிம்பு அணிந்திருக்கும் புகைப்படதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பாடல் நாளை ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சென்னை - மும்பை அணிகள் இடையேயான முதல் போட்டி நடைபெறவுள்ளது.