1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2025 (15:02 IST)

அதர்வாவின் ‘DNA’ படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள்..!

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்போது அதர்வாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தை டாடா, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளனர். காந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகிய ஐந்து புதுமுக இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.