வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (23:20 IST)

ஏமாற்றி பணம் பறித்த....சினிமா உதவி இயக்குநர் கைது

கோவையில் வயதானவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து முதியவர்களிடம் பணம் திருடிய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் புலியகுளத்தில் முதியரை மிரட்டியவரிடம் ரூ.1000 பணத்துடன் அவரது ஏடிஎம் கார்டை பறிமுதல் செய்த முகமது தம்பி என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

தம்பியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்  ஏடிமெம் மையங்களுக்குக் குறிவைத்துச் சென்று, அங்கு வரும் முதியவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து 10 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.