என் படங்கள் சரியாக ஓடவில்லை… ஆனால் தவறு என்னுடையது இல்லை –ஜெயம் ரவி ஓபன் டாக்!
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான காதலிக்க நேரமில்லை படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். கேவ்மிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படம் குறித்து பேசியுள்ள நடிகர் ஜெயம் ரவி “ என்னை சிலர் ஒரு வட்டத்துக்குள் வைத்திருந்தார்கள். அப்போது என் படங்களும் சரியாக ஓடவில்லை. ஆனால் நான் யோசித்துப் பார்க்கும் போது என்னுடைய தவறு எதுவும் இல்லை. நான் ஒழுங்காகதான் நடித்துள்ளேன் என்பதால் நான் துவண்டு போகமாட்டேன்.
துவண்டு போவது தோல்வியில்லை. விழுந்தால் எழாமல் இருப்பதுதான் தோல்வி. இந்த வருடம் கண்டிப்பாக மீண்டு வருவேன்” எனக் கூறியுள்ளார். அவர் நடிப்பில் அடுத்து ஜீனி படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.